தமிழ்நாடு

சீர்காழியில் கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

21st Sep 2020 05:59 PM

ADVERTISEMENT

 

சீர்காழி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த டிரைவர் உள்ளிட்ட இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை குமார கட்டளை தெருவை சேர்ந்தவர் துரை சண்முகம் 48. இவருக்கு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

சிகிச்சை முடிந்த நிலையில் அவரது அண்ணன் ரவிச்சந்திரன் 56, அவரது மகன் அஸ்வின் 16 ஆகிய இருவரும் காரில் துரை சண்முகத்தை அழைத்துக்கொண்டு ஊர் திரும்பியுள்ளனர். காரை ரவிச்சந்திரன் ஓட்டியுள்ளார். வழியில் வைதீஸ்வரன் கோவில் கீழ வீதி வளைவில் அதிவேகமாக வந்த கார் சென்டர் மீடியம் கடையில் மோதி கவிழ்ந்துள்ளது. 

ADVERTISEMENT

இந்த விபத்தில் படுகாயமடைந்த துரை சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தொடர்ந்து காயம் அடைந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வின் ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வைத்தீஸ்வரன்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT