தமிழ்நாடு

8-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய

21st Sep 2020 02:54 PM

ADVERTISEMENT

 

செப்டம்பர் - 2020ல் நடைபெறும் எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கோவிட்-19 தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு 29.09.2020 அன்று தொடங்கவுள்ள தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத ஏற்கெனவே சேவை மையங்கள் வாயிலாக, ஆன் - லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தற்போது http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகிளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் ஹால் டிக்கெட் என்பதை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும்.

அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேற்காண் தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 

ADVERTISEMENT

Tags : exam update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT