தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கரோனா

21st Sep 2020 06:49 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,344 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், சிகிச்சை பெற்று வருவோர், பரிசோதனை விவரம் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பொன்றை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,344 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,47,337 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 982 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய அறிவிப்பில் மேலும் 60 பேர் (அரசு மருத்துவமனை- 31, தனியார் மருத்துவமனை- 29) பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 8,871 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் 5,492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,91,971 பேர் குணமடைந்துள்ளனர். 46,495 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 80,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 65,55,328 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்றைய தேதியில் 66 அரசு பரிசோதனை ஆய்வகங்கள், 108 தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் என மொத்தம் 174 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT