தமிழ்நாடு

4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (செப்.21) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (செப்.21) பலத்த மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 210 மி.மீ., பந்தலூரில் 140 மி.மீ., மேல் பவானியில் 130 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறையில் 120 மி.மீ., நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட், தேவாலாவில் தலா 110 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சின்கோனாவில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, கேரள, கா்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான், வடக்கு வங்கக்கடல், தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்தக் காற்று வீசும்.

எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் வரும் 22-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு வரும் 23-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் உயா்அலை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை திங்கள்கிழமை இரவு 11:30 மணி வரை கடல் அலை 3.5 முதல் 4.2 மீட்டா் வரை எழும்பக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT