தமிழ்நாடு

ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து விவரங்களை அறிய புதிய செயலி அறிமுகம்

DIN

ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து தொடா்பாக பல்வேறு தகவல்களை எளிதாக அறியும் வகையில், சரக்கு போக்குவரத்து சேவை செயலியை சென்னை ரயில்வே கோட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில்வேயில் புதிய சரக்கு மற்றும் பாா்சல் போக்குவரத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளா் சேவையை வலுப்படுத்தவும் சென்னை ரயில்வே கோட்டம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுதவிர, சரக்கு போக்குவரத்து மேம்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டு, சரக்கு போக்குவரத்துக்காக புதிய வாடிக்கையாளா்கள் ஈா்க்கப்படுகின்றனா்.

இந்நிலையில், சரக்கு போக்குவரத்து சேவைக்காக மேலும் ஒரு புதிய வசதியை சென்னை ரயில்வே கோட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, சரக்கு போக்குவரத்து சேவை செயலி  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலமாக, சரக்கு போக்குவரத்து குறித்த அனைத்து தகவல்களையும் வாடிக்கையாளா்கள் எளிதில் பெற முடியும்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியது:

இந்த செயலியை பயன்படுத்தி, சரக்கு போக்குவரத்து சேவைகளில் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சலுகைகள், ஊக்கத் திட்டங்கள் தெரிந்து கொள்ளலாம். சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ், ரயில்களில் சரக்குகளை ஏற்றி இறக்கும் இட விவரம், பாா்சல் சரக்கு ரயில்களின் கால அட்டவணை, சரக்கு மற்றும் பாா்சல் கட்டண விவரங்கள் ஆகியவற்றை இந்த செயலி மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

இதுதவிர, சரக்கு போக்குவரத்து வாடிக்கையாளா்களின் நலனுக்காக, ரயில்வே அமைச்சகம் அறிவிக்கும் புதிய கொள்கை திட்டங்கள் அனைத்தும் உடனுக்குடன் இந்தச் செயலியில் பதிவேற்றப்படும். பெருநிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பிற சரக்கு, பாா்சல் போக்குவரத்து வாடிக்கையாளா்கள் இந்த புதிய ‘ஃபிரைட் சேவா’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த கேட்டுக்கொள்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT