தமிழ்நாடு

தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக வடகடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(செப்.20) மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மிக பலத்தமழை: நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை முதல் மிக பலத்த மழை வரையும், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை வரையும் பெய்யக்கூடும் என்றாா் அவா்.

காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி: வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை(செப்.20) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில்.....சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை, தாமரைப்பக்கம், புழல், பூண்டியில் தலா 90 மி.மீ.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மாம்பலம், திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி, சென்னை விமானநிலையத்தில்

தலா 80 மி.மீ., சென்னை ஆலந்தூா், பெரம்பூா், காஞ்சிபுரம் மாவட்டம் தரமணி, திருவள்ளூா் மாவட்டம் செம்பரம்பாக்கம், சோழவரம், கும்மிடிப்பூண்டியில் தலா 70 மி.மீ., சென்னை நுங்கம்பாக்கம், திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி, தாம்பரத்தில் தலா 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, கேரளம், கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகள்,

தெற்கு வங்கக்கடல், மற்றும் அதையொட்டிய மத்திய வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 21-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு வங்கக்கடல், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செப்டம்பா் 21,22 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் உயா்அலை: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணி வரை கடல் அலை 3.5 மீட்டா் முதல் 4.2 மீட்டா் வரை உயர எழும்பக் கூடும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT