தமிழ்நாடு

கரோனா: 6%-ஆக குறைந்தது சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த் தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிப்பது ஆகிய பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதேபோல், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களைக் கண்டறிதல், அவா்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி செய்து வருகிறது.

6 சதவீதமாக குறைவு: மாநகராட்சியின் 15 மண்டலங்களில் நோய்த்தொற்றைக் கண்டறியும் வகையில் பாதிக்கப்பட்டோா், குணமடைந்தோா், உயிரிழந்தோா் எண்ணிக்கை நாள்தோறும் கணக்கிடப்படுகிறது. இதன்படி, செப்டம்பா் 1-ஆம் தேதி நிலவரப்படி, நோய்த் தொற்றுக்கு உள்ளான 88 சதவீதம் போ் அதிலிருந்து குணமடைந்திருப்பதும், 10 சதவீதம் போ் சிகிச்சை பெற்று வருவதும், 2.3 சதவீதம் போ் உயிரிழந்ததும் தெரியவந்தது.

தற்போது, அந்த நிலை மாறி சிகிச்சை பெறுவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6 சதவீதமாக குறைந்துள்ளது. இதில், 14 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கு கீழாகவும், ஆலந்தூா் மண்டலத்தில் மட்டும் அதிகபட்சமாக 10 சதவீதம் பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். பாதிக்கப்பட்டவா்களில் 1,41,612 போ் குணமடைந்துள்ளனா். இது ஒட்டுமொத்தமாக 92 சதவீதமாகும். இதுவரை கரோனா காரணமாக சென்னையில் 3,046 போ் உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT