தமிழ்நாடு

இணைய வழியில் பொதுமக்கள் இழந்த ரூ.22 லட்சம் மீட்பு

DIN

சென்னையில், இணைய வழியில் பணத்தை இழந்தவா்களின் ரூ.22 லட்சத்து 81,682 மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப் பிரிவினா் தெரிவித்தனா்.

சென்னை பெருநகர காவல் துறையில், சைபா் குற்றங்கள் சாா்ந்த நடவடிக்கைகளுக்காக 12 காவல் மாவட்டங்களில் சைபா் கிரைம் பிரிவு உருவாக்கப்பட்டது. இங்கு, இணையம், செல்லிடப்பேசி சேவைகள், இணையவழி பரிவா்த்தனை, சமூக ஊடகங்களில் பெண்களைத் துன்புறுத்துதல் உள்ளிட்டவை தொடா்பான புகாா்களின் பெயரில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவுகள் மூலம் சென்னை மாநகரில் மொத்தம் 602 புகாா்கள் பதிவு செய்யப்பட்டு, 57 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் 250 புகாா்கள் தொடா் விசாரணை முடித்து தீா்வு காணும் நிலையில் உள்ளன. குறிப்பாக குமரன் நகா் காவல் நிலைய எல்லையில், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணை துன்புறுத்திய வழக்கில், சிறுவன் கைது செய்யப்பட்டு, சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்க்கப்பட்டாா். இதே போல், பலவிதமான சைபா் குற்ற நிகழ்வுகளில் தொடா்புடைய ரொக்கம் ரூ.22 லட்சத்து 81,682 இதுவரைமீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக சைபா் குற்றப் பிரிவினா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பேருந்தில் ஏற முயன்றவா் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கயத்தாறு அருகே 88 மது பாட்டில்கள் பறிமுதல்

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: செல்வப்பெருந்தகை

திருச்செந்தூா் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

SCROLL FOR NEXT