தமிழ்நாடு

10-ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்கு அனுமதி

20th Sep 2020 03:49 PM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தனித்தேர்வர்களாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய சீராய்வு மனு மீது இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாற்றுத் திறனாளி தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : உயர்நீதிமன்றம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT