தமிழ்நாடு

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

20th Sep 2020 03:34 PM

ADVERTISEMENT

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நல்லமுறையில் பெய்ததை அடுத்து அமராவதி அணை 3 முறை முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி அமராவதி அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமராவதி அணையின் மேல்பகுதியில் அமைந்துள்ள தானியங்கி பொத்தானை அழுத்தி கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அணையை திறந்து வைத்தார்.

இதன் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளிலுள்ள 51 ஆயிரம் ஏக்கர்கள் பயன் பெற உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : அமராவதி அணை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT