தமிழ்நாடு

அமைச்சர் ஜெய்சங்கர் தாயாருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

20th Sep 2020 02:36 PM

ADVERTISEMENT

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் சுலோச்சனா சுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று (சனிக்கிழமை) காலமானார். 

உடல்நலக் குறைவால் கடந்த சில நாள்களாக கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனையி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தமது சுட்டுரை பக்கத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாஜக தலைவர் ராம் மாதவ், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, தனது தாயாரை இழந்து வாடும் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய துயர்மிகு நேரத்தில் அவர்கள் வலிமை பெற்றிட விழைகிறேன் என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tags : மு.க.ஸ்டாலின்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT