தமிழ்நாடு

நிஃப்ட்-டீ கல்லூரி டிசைன் ஸ்டுடியோவில் உறுப்பினராக சேர தொழில்துறையினருக்கு அழைப்பு

20th Sep 2020 03:29 PM

ADVERTISEMENT

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நிஃப்ட்-டீ கல்லூரியில் புதியதாக உருவாகும் டிசைன் ஸ்டுடியோவில் உறுப்பினராக தொழில்துறையினருக்கு கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து டிசைன் ஸ்டுடியோ தலைவர் கோவிந்தராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ கல்லூரியில் சர்வதேச தரத்திலான டிசைன் ஸ்டுடியோ ரூ.15 கோடி மதிப்பீட்டில் உருவாகி வருகிறது. இந்த ஸ்டுடியோவை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் 75 சதவிகிதமும், தொழில் துறையினர் 25 சதவிகிதம் முதலீடு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஆயத்த ஆடை துறையில் சர்வதேச அளவிலான போட்டிகளை எளிதில் சமாளிப்பதுடன், புதிய டிசைன்களையும் உருவாக்கி சேம்பிள்களைத் தயாரித்து வர்த்தகர்களுக்கு அனுப்பி வெளிநாட்டு ஆர்டர்களைக் கைப்பற்ற முடியும்.

இந்த ஸ்டுடியோவில் தற்போது வரையில் 50 தொழில்துறையினர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். ஆகவே, திருப்பூரில் உள்ள தொழில்துறையினர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் ஸ்டுடியோவில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரை 82203-65111, 96555-85111 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : திருப்பூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT