தமிழ்நாடு

சங்ககிரியில் ஐந்து லாந்தர் கம்பத்தில் பல ஆண்டுகளுக்கு பின் மின் விளக்குகள் பொருத்தம்: முதல்வருக்கு நன்றி 

20th Sep 2020 02:35 PM

ADVERTISEMENT

சங்ககிரி: சங்ககிரி பழைய எடப்பாடி சாலை, நல்லப்பநாயக்கன் தெரு நுழைவு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த சிதலமடைந்த நிலையில் இருந்த ஐந்து லாந்தர் கம்பத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஐந்து மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. 

சங்ககிரி பழைய எடப்பாடி சாலை, நல்லப்ப நாயக்கன் தெரு நுழைவு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஐந்து லாந்தர் கம்பம் உள்ளது.  கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அக்ரஹார வீதி, மலையடிவாரம் செல்லும் சாலை, தேர் வீதி ஆகிய பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கடைகள் இருந்துள்ளன. இப்பகுதிகளில் வணிகர்கள் குடியிருப்புகளும், அக்ரஹாரம், இஸ்லாமிய குடியிருப்புகளும்  இருந்ததையடுத்து அப்பகுதியில் வெளிச்சம் வருவதற்காக இரும்பு தூணில் ஐந்து முகங்கள் கொண்ட விளக்குகளை தொங்கவிட்டுள்ளனர் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

இதனையடுத்து அக்கம்பம் தொடர்ந்து மழை மற்றும் வெப்பத்தில் கலையிழந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்த இரும்புதூண் இன்று வரைக்கும் துருப்பிடிக்காமல் உள்ளன.  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகி ஏ.வெங்கடேஸ்வரகுப்தா தலைமையில் அக்கம்பத்திற்கு வெள்ளை வர்ணம்பூசினர்.  அதனையடுத்து சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்ககிரியில் பழமை வாய்ந்த வரலாற்று சின்னமாக விளங்கி வரும் அக்கம்பத்தை பாதுகாக்க எண்ணிய நிர்வாகிகள் அதனை செப்பனிட்டனர். 

ADVERTISEMENT

செப்பனிடப்பட்ட  ஐந்து லாந்தர் கம்பத்தில் ஐந்து முகங்களிலும் ஓளிரும் மின் விளக்குகளை பொத்தானை அழுத்தி சனிக்கிழமை தொடக்கி வைக்கிறார் சங்ககிரி நகர கூட்டுறவு வங்கித்தலைவர் என்சிஆர்.ரத்தினம். 

இதனையடுத்து தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவரும், அதிமுக சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலருமான கே.வெங்கடாஜலம் தலைமையில் அதிமுகவினர் அக்கம்பத்திற்கு மின் விளக்குகள் பொருத்த சங்ககிரி பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.  இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கம்பத்தை சுற்றிலும் ஐந்து மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

பொருத்தப்பட்ட மின் விளக்குகளை சங்ககிரி நகர கூட்டுறவு வங்கித்தலைவர் என்சிஆர்.ரத்தினம் பொத்தானை அழுத்தி தொடக்கி வைத்தார். சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க செயலர் கே.கே.நடேசன், சங்ககிரி கூட்டுறவு பண்டகசாலைத்தலைவர்  சி.செல்வம்,  எ.வெங்கடேஸ்வரகுப்தா, பேரூராட்சி அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.  

சங்ககிரியில் பழமை வாய்ந்த ஐந்து லாந்தர் கம்பத்திற்கு மின் விளக்கு பொருத்தி ஒளிரச் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும்,  கம்பத்தை பாதுகாத்து செப்பனிட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கும் சங்ககிரி நகரில் உள்ள  பல்வேறு பொதுநலஅமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : electric lights
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT