தமிழ்நாடு

மேல்விஷாரம் நகர திமுக சார்பில் இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

20th Sep 2020 03:32 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர திமுக சார்பில் இணையதளம் மூலம் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை ஹாஹிபேட்டை பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர பொறுப்பாளர் எஸ்டி அமீன் தலைமை வகித்தார். தொழிலதிபர் சௌகார் முன்னா. நகர அவைத்தலைவர் ஹிமாயூன். பொருளாளர் ஜஃபர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ச்  செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.காந்தி கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசினார். இதில், மாவட்ட அவைத்தலைவர் அசோகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : ராணிப்பேட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT