தமிழ்நாடு

பவானியில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

20th Sep 2020 03:17 PM

ADVERTISEMENT

பவானி: மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், வேளாண் திருத்த மசோதா 2020 ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பவானி அடுத்த மயிலம்பாடி, கட்டியகவுண்டனூரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயம்மா தலைமை வகித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வேளாண் திருத்த சட்ட மசோதா 2020-ஐ உடனே ரத்து செய்ய வேண்டும். இச்சட்டத்துக்கு எதிராக போராடும் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.ந

சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கதிர்வேல், மாவட்ட துணைச் செயலாளர் மகேஷ், மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : FarmBill
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT