தமிழ்நாடு

முதல்வரின் தூத்துக்குடி மாவட்ட வருகை ரத்து

20th Sep 2020 03:31 PM

ADVERTISEMENT


தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செப்டம்பர் 22  ஆம் தேதி வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செப்டம்பர் 22 ஆம் தேதி வருகை தந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து  கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முதல்வரின் வருகை விபரம் மற்றும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : Chief Ministers visit canceled
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT