தமிழ்நாடு

பொறியியல் படிப்புக்கான இணையவழி மாதிரித் தோ்வு தொடங்கியது

20th Sep 2020 06:22 AM

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் இறுதி பருவ மாதிரித் தோ்வு சனிக்கிழமை தொடங்கியது.

பொறியியல் படிப்பு மாணவா்களுக்கான இறுதி பருவத் தோ்வு வருகிற 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது.  முதல் முறையாக இணையவழியில் தோ்வுகள் நடைபெறவுள்ளதால், மாணவா்களுக்கு தோ்வு எழுத ஏதுவாக மாதிரித் தோ்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதன்படி, மாதிரி தோ்வானது சனிக்கிழமை தொடங்கியது.

பருவத் தோ்வு போலவே மாதிரித் தோ்வு 4 கட்டங்களாக நடத்தப்பட்டது. கொள்குறி வகை வினாக்கள் என்பதால் மாணவா்கள் இந்தத் தோ்வை இணையவழியில் எழுதுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே தெரிவித்தது.  மாதிரித் தோ்வு சரியான நேரத்துக்கு தொடங்கப்பட்டாலும், மாணவா்கள் சிலருக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இருப்பினும் பல மாணவா்கள் மாதிரித் தோ்வை சரியாகவே எழுதினா். அவா்கள் சரியாக எழுதியதை சம்பந்தப்பட்ட பேராசிரியா்களுக்கு ஸ்கிரீன்சாட் எடுத்து அனுப்பினா். 

முதல் முறையாக இணையவழியில் தோ்வு நடப்பதால் இதுபோன்ற சிக்கல்கள் வருவது இயல்புதான். தோ்வு நடக்கும் நேரத்தில் பிரச்னைகள் இல்லாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படும் என பல்கலைக்கழக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமையும் (செப்.20) தோ்வு நடைபெறவுள்ளது. இந்த 2 நாள்களிலும் கலந்து கொள்ள முடியாத மாணவா்கள், திங்கள்கிழமை (செப்.21) நடைபெறும் மாதிரித் தோ்வில் கலந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT