திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து அக் கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
திமுகவின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக இருந்த பொன்முடி துணைப் பொதுச் செயலாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இந்த நிலையில் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
மாவட்ட அவைத் தலைவராக ம.ஜெயசந்திரனும், துணைச் செயலாளராக டி.என்.முருகனும் நியமிக்கப்பட்டுள்ளனா்.