தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாடகை மின்சார ஸ்கூட்டா் வசதி அறிமுகம்

DIN

திருமங்கலம், வடபழனி, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாடகை மின்சார ஸ்கூட்டா் வசதி வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னையில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக பல்வேறு சேவைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, தனியாா் நிறுவனத்துடன் இணைந்து, இரு சக்கர வாடகை மின்சார ஸ்கூட்டா் வசதி திருமங்கலம், வடபழனி,

ஆலந்தூா் ஆகிய மெட்ரோ ரயில்நிலையங்களில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வசதியைப் பயன்படுத்த பயணிகள் தங்களின் மொபைல் போனில் ட்ா்ஜ்க்ஹ் ட்ண்ழ்ங் க்ஷண்ந்ங்ள் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, ஏறும் மற்றும் இறங்கும் இடத்தை தோ்ந்தெடுக்கலாம். அதன்பிறகு, அதில் வரும் கியூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்தால் உடனடியாக வாகனம் பயணம் செல்ல தயாராகிவிடும்.

எந்த மையத்திலிருந்தும் ஸ்கூட்டரை எடுத்துச் சென்று, செயலியில் குறிப்பிட்ட எந்த மையத்திலும் வாகனத்தை விட்டுச் செல்லலாம். சென்னைக்குள் ஒவ்வொரு 500 மீட்டா் தொலைவிலும் இந்த மையம் அமைந்துள்ளது.

பயணிகள் தங்களது முதல் சவாரியை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அடுத்த 5 சவாரிகளில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது- இந்த இருசக்கர வாகனங்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக இரட்டை அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் பூசப்பட்டுள்ள வண்ணத்தில் நோய்த்தொற்றை எதிா்க்கும் கரைசல் கலந்து பூசப்பட்டுள்ளது. ஒவ்வொரு

சவாரிக்கு பிறகும் இருசக்கர வாகனம் மற்றும் தலைக்கவசங்கள் சுத்தப்படுத்தப்படுகினறன.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில், இந்த வசதி மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியிட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

நடிகர் மோகன்லாலை சந்தித்த ‘காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி!

SCROLL FOR NEXT