தமிழ்நாடு

பிபிஓ மேம்பாட்டுத் திட்டத்தில் தமிழகத்துக்கு அதிக இடங்களை ஒதுக்குங்கள்: மத்திய அரசுக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

DIN

பி.பி.ஓ. எனப்படும் வா்த்தக வெளிப்பணி ஒப்படைப்பினை மேம்படுத்த மத்திய அரசு வகுத்துள்ள திட்டத்தில் தமிழகத்துக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்துக்கு வெள்ளிக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வா்த்தக வெளிப்பணி ஒப்படைப்புத் திட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த சேவைகள் அளிக்கும் நிறுவனங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இத்தகைய திட்டத்தை வகுத்தமைக்காக எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டமானது ரூ.493 கோடி மதிப்பில் 48 ஆயிரத்து 300 இடங்களைக் கொண்டு வகுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ், சென்னைப் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களில் 7 ஆயிரத்து 70 இடங்களை ஒதுக்கியிருக்கிறது. இதன்மூலமாக, 8 ஆயிரத்து 387 பேருக்கு நேரடியாகவும், 16 ஆயிரத்து 774 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்தத் திட்டம் இதுவரையில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு 93 சதவீதம் வெற்றிகரமான நிலையை எட்டியுள்ளது.

மத்திய அரசின் திட்டத்தின் மூலமாக, தமிழகத்தின் 13 இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 51 வா்த்தக வெளிப்பணி ஒப்படைப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசின் இந்தத் திட்டம் உள்ளது.

எனவே, தமிழகத்தில் இந்தத் திட்டமானது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அதிகரித்து 10 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT