தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.39,536

DIN

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.184 உயா்ந்து, ரூ.39,536-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.184 உயா்ந்து, ரூ.39,536-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.23 உயா்ந்து, ரூ.4,942 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் சற்று உயா்ந்தது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா உயா்ந்து,

ரூ.70.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.70,300 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,942

1 பவுன் தங்கம்............................... 39,536

1 கிராம் வெள்ளி.............................70.30

1 கிலோ வெள்ளி.............................70,300

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,919

1 பவுன் தங்கம்...............................39,352

1 கிராம் வெள்ளி.............................69.90

1 கிலோ வெள்ளி.............................69,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT