தமிழ்நாடு

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

DIN

புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், கரோனா காலகட்டத்தில் நீட் தேர்வை நடத்தக்கூடாது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆர்எஸ்எஸ்  கொள்கைக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறை தடுப்பை மீறி திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் இருதரப்பிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT