தமிழ்நாடு

புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்

DIN

புரட்டாசி மாசம் முதல் சனிக்கிழமையையொட்டி ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. 

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பார்கள். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். இதைப்போல் ஏழரைச் சனி உள்ளவர்கள் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் வழிபட்டால் மிகவும் விசேஷம். அதன்படி இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை.

இதையடுத்து ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு யாகசாலை நடந்தது. இதன் பின்னர் கோட்டை பெருமாளுக்கு சந்தனம், பன்னீர் மூலிகை உள்பட 16 வகையான திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. மேலும் தங்கக் கவச அலங்காரத்தில் கோட்டை பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். 

முன்னதாக கோவில் நுழைவாயில் சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு கையில் சனிடைசர்கள் தெளிக்கப்பட்டன. பக்தர்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முகக் கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எப்போதும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 

ஆனால் தற்போது வைரஸ் தாக்கம் காரணமாக வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதே போல் பாவனி சாலையில் உள்ள பெருமாள் மலையிலும் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது, அக்ரகாரம் வீதியிலுள்ள ஐயர் பெருமாள் கோவில் கேஸ் நகர் பகுதியில் உள்ள பெருமாள் கோவில், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதியில் உள்ள பெருமாள் கோவிலிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி பெருமாள் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT