தமிழ்நாடு

திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், ஊத்துக்குளியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் வி.கே.முத்துசாமி, மார்க்சிஸ்ட் வட்டச்செயலாளர் கே.ஏ.சிவசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய கல்விக் கொள்கை, மின்சார திருத்த சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.

கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாள்களை அதிகப்படுத்துவதுடன், நகர்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். நுண் நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் ஆகியவற்றின் கடன் வசூலை ஒரு ஆண்டுக்கு ஒத்திவைப்பதுடன், ஒரு ஆண்டுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர்.

மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார்,இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் வி.பி.பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், நல்லூரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT