தமிழ்நாடு

மேட்டூர் அருகே கோவிலில் பாம்பை வெட்டி சமையல் செய்து சாப்பிட்ட விடியோ

18th Sep 2020 11:32 AM

ADVERTISEMENT

மேட்டூர் அடுத்த தங்கமாபுரி பட்டணம், வடபத்ரகாளியம்மன் கோவிலில் சமூக விரோதிகள் பாம்பை வெட்டி சமையல் செய்து சாப்பிட்ட  விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சேலம் மாவட்டம் ,மேட்டூர் அடுத்த தங்கமாபுரியபட்டணம் வடபத்ர காளியம்மன் கோவிலின் பின் பகுதியில் சமூக விரோதிகள் அப்பகுதியில் சுற்றி திரிந்த பாம்பு ஒன்றை பிடித்து தோல் உரித்து அதை வெட்டி சமைத்து உண்ணும் நேரடி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடை பெற்றது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இவர்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT