தமிழ்நாடு

கோயம்பேடு உணவு தானிய வளாகம் திறப்பு: வணிகர்கள் மகிழ்ச்சி

18th Sep 2020 04:07 PM

ADVERTISEMENT


கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதற்கு வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், கோயம்பேடு வணிக வளாக திறப்பிற்காக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் கோயம்பேடு கூட்டமைப்பு நிர்வாகிகளை, தமிழக அரசு நேரில் அழைத்துப் பேசி, முதலில் செப்டம்பர் 18ஆம் நாளான இன்று, உணவுதானிய வணிக வளாகத்தை முதலில் திறப்பதாகவும், செப்டம்பர் 28ஆம் தேதி காய்கறி மொத்த வணிகவளாகத்தை திறப்பதாகவும் அறிவித்தது.

அதன் அடிப்படையில் இன்று கோயம்பேடு மொத்த உணவு தானிய வணிக வளாகம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வு வணிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், மன எழுச்சியையும் தந்திருக்கிறது. 

அதே நேரத்தில் எஞ்சியிருக்கின்ற மொத்த பழ வணிக வளாகத்தையும், மலர் வணிக வளாகத்தையும், சில்லரை மொத்த காய்கறி வணிகத்தையும், திறப்பதற்கான தேதியை செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அறிவித்து, கடந்த 5 மாதங்களாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, வாழ்வாதாரம் இழந்து வறுமையில் சிக்கித் தவிக்கும் வணிகர்களன் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு அறிவிப்பு வெளியிட வேண்டுமெனவும், மேலும், மாநிலம் முழுவதும் முடக்கி வைக்கப்பட்டுள்ள குறிப்பாக திருச்சி காந்தி மார்க்கெட், கோவை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளை ஏற்கனவே இயங்கி வந்த இடங்களிலேயே மீண்டும் இயங்கிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அனைத்து வணிகர்கள் மற்றும் வணிகக் குடும்பங்களின் சார்பில் இருகரம் கூப்பி வேண்டுகிறது.

ADVERTISEMENT

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள அத்தியவாசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து விவசாயப் விளைபொருட்களான உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் நீக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசின் தற்போதைய சட்ட நிலைபாடு பதுக்கலுக்கும், கள்ள மார்க்கெட்டிற்கும், விலைவாசி ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு முன்வைக்கின்றது. இவ்வாறு பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Tags : koyambedu
ADVERTISEMENT
ADVERTISEMENT