தமிழ்நாடு

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN


திருவாரூர்: ரயில்வே துறையை தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் ரயில் நிலையத்தில் எஸ் ஆர் எம் யு தொழிற்சங்கத்தின் சார்பில் ரயில்வே ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையை மத்திய அரசு தனியார் மயமாக்கக் கூடாது, 150 ரயில்களையும் மற்றும்  சரக்கு ரயில்களையும் தனியாருக்குத் தரும் முடிவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்.

முப்பது வருட அனுபவம் அல்லது 55 வயது பூர்த்தி செய்த ஊழியர்கள் என்ற அடிப்படையில் ரயில்வே ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு என மிரட்டக் கூடாது, 2500 டீசல் லோகோக்கலை உடைத்து விற்பது என ஆயிரக்கணக்கான உதவியாளர்கள் மற்றும்  உங்களின் தொழில்நுட்ப வல்லுநர்களின் நிரந்தர வேலைவாய்ப்பைப் பறிக்கக்கூடாது.

பயணிகள் ரயில் ரத்து, ரயில் நிறுத்தங்கள், க்யூ ஆர்க் கோடு என்ற பெயரால் டிராபிக் தொழிலாளர்கள் மற்றும்  டிக்கெட் பரிசோதனை  தொழிலாளர்களின் வேலைகளைப் பறிக்கக்கூடாது,  1974இல் போனசிற்காக வேலைநிறுத்தம் செய்த லட்சக் கணக்கானோரின் போராட்டத்தில் கிடைத்த பி எல் பி போனஸை பறிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ரயில் நிலையத்தில் ஏராளமான ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT