தமிழ்நாடு

கம்பத்தில் இந்திய தேசிய லீக் கட்சியினர் சாலை மறியல்

18th Sep 2020 11:24 AM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் வியாழக்கிழமை இரவு இந்திய தேசிய லீக் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழனி அருகே  ஆயக்குடியில் பழனிபாபா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பாஜக சார்பில் கொடியேற்றப்பட்டது.

இதை கண்டித்து வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு கம்பம் கம்பமெட்டு ரோடு சந்திப்பில் இந்திய தேசிய லீக்  மாநில செயலாளர் முகமது சாதிக் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தகவல் கிடைத்ததும் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீமைச்சாமி, கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் கே. சிலைமணி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT