கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் எஸ்சி அணி சார்பில் நரேந்திர மோடி 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட், முகக் கவசம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாஜக கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எஸ்சி அணி மாவட்ட தலைவர் மகேந்திரன் மாவட்டச் செயலாளர் சண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக எஸ் சி அணி மாநில துணைத்தலைவர் கஸ்தூரி, மாவட்ட தலைவர் தர்மலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணப்பன், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் சரவணன், மாவட்டச் செயலாளர் அலமேலு தெற்கு ஒன்றிய தலைவர் சங்கர் மாவட்ட மகளிரணி தலைவர் முருகம்மாள் மாவட்ட எஸ்சி அணி துணைத் தலைவர் கணேசன், சக்தி கேந்திரா கிளை தலைவர் மோகன் மாவட்ட பொருளாளர் பிரகாஷ் மற்றும் ஒன்றிய நகரக் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.