தமிழ்நாடு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரிப்பதற்கு துரைமுருகன் எதிர்ப்பு

17th Sep 2020 02:41 AM

ADVERTISEMENT


சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று  அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து துரைமுருகன் பேசியது: வட ஆற்காடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்றுதான் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை காட்பாடியில் கருணாநிதி தொடக்கினார்.  
இந்தப் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது என்பது அநியாயம். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். விழுப்புரத்துக்கு வேறு பல்கலைக்கழகம் கொடுங்கள். இதை விடுங்கள் என்றார்.
அப்போது முதல்வர் குறுக்கிட்டு கூறியது: ஆதங்கப்பட வேண்டியது இல்லை. கல்விக்கு முன்னுரிமை கொடுப்பதற்காகத் தான் இந்தப் பல்கலைக்கழகம் பிரிக்கப்படுகிறது.  ஏற்கனவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கின்ற கல்லூரிகளையெல்லாம் ஒன்றாக இணைத்து, புதிய பல்கலைக்கழகம் உருவாக்குகிறோம். 
இதில் என்ன பிரச்னை இருக்கிறதென்றுதான் எனக்குத் தெரியவில்லை. கல்லூரிகள் அதிகமாக இருக்கும்பொழுது நிர்வாக வசதிக்காக பிரிக்கிறோமே தவிர எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT