தமிழ்நாடு

சென்னையில் 'யூ' வடிவ மேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

17th Sep 2020 03:50 PM

ADVERTISEMENT

 

சென்னையில் அமைய உள்ள இரண்டு யூ வடிவ மேம்பாலங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று  செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் வண்டலூர் - கேளம்பாக்கம் - மாம்பாக்கம் சாலை இணையும் சந்திப்பில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

மற்றும் பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் 80 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

மேலும், 30 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலங்கள் மற்றும் புறவழிச்சாலையை திறந்து வைத்து, சென்னை மாவட்டம், ராஜீவ் காந்தி சாலையில், டைடல் பார்க் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சந்திப்பு ஆகிய இடங்களில் 108 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 “யூ” வடிவ மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
 

Tags : tn cm palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT