தமிழ்நாடு

கொடைக்கானலில் திடீர் மழை

17th Sep 2020 02:41 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானலில் திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்தது அதன்பிறகு கடந்த நான்கு நாள்களாக மழை இல்லாமல் இருந்தது.

மழை குறைந்து காணப்பட்டதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் குளிர் அதிகமாக நிலவியது.

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை வெயில் நிலவியது. அதன் பிறகு மேகமூட்டத்துடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

இந்த மழையானது கொடைக்கானல் பகுதிகளான நாயுடுபுரம், அப்சர்வேட்டரி, செண்பகனுர், வட்டக் கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 40 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT