தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

17th Sep 2020 12:53 PM

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி இன்று தனது 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, நாடு முழுவதும் பாஜகவினர் மோடியின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தலைவர்கள், பிற கட்சித் தலைவர்கள் பலர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து தமிழக எதிர்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

 

Tags : பிரதமர் மோடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT