தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

DIN

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 8,622 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை 12,894 கனஅடியாக அதிகரித்தது.  புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 91.78 அடியாக இருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 15,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  அணையின் நீர் இருப்பு 54.70 டி.எம்.சி.யாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT