தமிழ்நாடு

லோயர் கேம்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு

17th Sep 2020 05:49 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பெரியாறு மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 3 மின்னாக்கிகள் மூலம் தலா, 42 மெகாவாட் என மொத்தம் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி வியாழக்கிழமை நடைபெற்றது.

அதேநேரத்தில் புதன்கிழமை தமிழகப் பகுதிக்கு 1,700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 3 மின்னாக்கிகளில், 42, 42, 32 என மொத்தம்  116 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது.

ADVERTISEMENT

புதன்கிழமை, 116 மெகாவாட் உற்பத்தியாக இருந்தது வியாழக்கிழமை, 126 மெகாவாட் மின்சார உற்பத்தியாக  உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அணை நிலவரம் வியாழக்கிழமை நிலவரப்படி முல்லைப் பெரியாறு

அணையின் நீர்மட்டம் 126.10 அடி உயரமும், அணையில் நீர் இருப்பு 3,856 மில்லியன் கன அடியும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,549 கன அடியும், அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 400 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT