தமிழ்நாடு

சாதி, மதம் எனும் பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது - தொல் திருமாவளவன்

17th Sep 2020 07:28 PM

ADVERTISEMENT

கொரியா தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச கருத்தரங்கில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.

கொரியா தமிழ்ச்சங்கமும், தென்புலத்தாரும் இணைந்து நடத்திய கொரியா தமிழ் உறவுகள் ஒரு பார்வை என்ற சர்வதேச இணையவழிக் கருத்தரங்கை நடத்தின. அதில் பங்கேற்றுப் பேசிய தொல்.திருமாவளவன்,  “மனிதனை மொழி, சாதி மற்றும் மதத்தால் வேறுபடுத்தி, தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைப்பது ஆபத்தாக முடிகிறது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,  “ தமிழன் கடல்கடந்து வணிகம் செய்திருக்கிறான். படை நடத்தி நாடுகளை கைப்பற்றியிருக்கிறான். இவற்றுக்கெல்லாம் இன்றைக்கு ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.  மனிதகுலம் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கவில்லை. புலம்பெயர்தல் என்பது மனிதகுலத்தில் தவிர்க்க முடியாத விஷயம்.” என்றார்.

மேலும், “கொரிய மண்ணில் கிடைத்திருக்கிற முதுமக்கள் தாழிகள், சுமைதாங்கிக் கற்கள், எழுத்துருக்கள் எல்லாம் நமக்கு சிறப்புச் சேர்க்கின்றன. தமிழர்களுக்கும் கொரியர்களுக்குமிடையேயான தொடர்புகளை அவை உறுதிப்படுத்துகின்றன.” எனக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து,  “இந்த பூமி எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், ஒவ்வொருவரும் தங்களுக்குள் எல்லைகளை வரையறுத்துக்கொண்டு, தனித்துவம் என்ற பெயரால் முட்டிமோதிக்கொண்டு நம்மை நாமே பகைத்துக்கொண்டு, அழித்துக்கொண்டு சிதைந்து கொண்டிருக்கிறோம். சாதியை வைத்தோ, மதத்தை வைத்தோ, மொழியை வைத்தோ மனிதர்களை பிரிக்கும் போக்கு ஆபத்தானது. சாதித் தூய்மைவாதம், மதத் தூய்மைவாதம் உள்ளிட்டவை மனிதநேயத்திற்கு எதிரானது.. மனிதன் கண்டுபிடித்த கோட்பாடுகளில் ஜனநாயகம்தான் உயர்ந்த கோட்பாடு.” எனத் தெரிவித்தார்.

மேலும் கொரிய தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக தொல்.திருமாவளவன் உறுதியளித்தார். 

இந்த கருத்தரங்கை முதன்மை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆரோக்கியராஜ், பொறியாளர் சகாய டர்சியூஸ், முனைவர் ராமசுந்தரம், முனைவர் பத்மநாபன், முனைவர் கிறிஸ்டி காத்தரின், பொறியாளர் ஆனந்தகுமார், முனைவர் செ.அரவிந்தராஜ் ஆகியோர் நெறிப்படுத்தினர். கருத்தரங்கில் கொரியா தமிழ் உறவுகள் குறித்து ஒரிசா பாலு, முனைவர் நா.கண்ணன் ஆகியோர் பேசினர்.

Tags : thol.Thirumavalavan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT