தமிழ்நாடு

பொறியியல் மாணவர்களுக்கான இறுதிப் பருவத் தேர்வு: அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலை.

17th Sep 2020 03:41 AM

ADVERTISEMENT

 

சென்னை: பொறியியல் மாணவர்களின் இறுதிப் பருவத் தேர்வு குறித்த விரிவான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்டது. 

 பொறியியல் படிப்புகளில் இறுதிப் பருவ மாணவர்களுக்கான தேர்வு, வரும் 22 தொடங்கி 29}ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 22}ஆம் தேதி பிராஜெக்ட் மற்றும் நேர்காணல் தேர்வு (வைவா வோஸ்) நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 24}ஆம் தேதி முதல் 29}ஆம் தேதி வரை, இணையவழியில் தேர்வு நடத்தப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.  

இந்த நாள்களில், பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.ஆர்க் போன்ற பொறியியல் படிப்புகளில், இறுதி பருவத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, எந்தெந்த பாடப்பிரிவுகளுக்கு எப்போது தேர்வு என்பது குறித்த விரிவான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்டு இருக்கிறது. இணையவழியில், கொள்குறி வினா முறையில் இந்தத்  தேர்வு நடைபெற இருக்கிறது. காலை 10 முதல் 11 மணி வரை, நண்பகல் 12 முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 2 முதல் 3 மணி வரை, மாலை 4 முதல் 5 மணி வரை என நாளொன்றுக்கு, 4 கட்டங்களாக தேர்வு நடைபெற இருக்கிறது. 

ADVERTISEMENT

அதற்கேற்றாற்போல் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் சென்று அட்டவணையை தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT