தமிழ்நாடு

ஈரோட்டில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

17th Sep 2020 04:06 PM

ADVERTISEMENT

 

தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் முத்துசாமி தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பொருளாளர் பழனிச்சாமி மாநகரச் செயலாளர் சுப்ரமணியம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே. இ பிரகாஷ்,முன்னாள் நகர செயலாளர் பொன்னுசாமி பொதுச் செயலாளர்கள் செல்வராஜ் ராமச்சந்திரன் தலைமை கழக பேச்சாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் பரமசிவம் தலைமையில் மாநகர அமைப்பாளர் மார்க்கெட் சுரேஷ் முன்னிலையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே. இ பிரகாஷ் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள பெரியார்-அண்ணா நினைவகம் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ பி ரவி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், அயுப் அலி, மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா நிர்வாகி பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோடு மாநகர கிழக்கு மாவட்டச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மாநில நெசவாளர் அணி செயலாளர் சண்முகம் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்டச் செயலாளர் ஜாபர் அலி. நிர்வாகி அஜ்மத் நிர்வாகிகள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ் புலிகள் கட்சி சார்பில் மத்திய மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன் தலைமையில் நிர்வாகிகள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் கொள்கை பரப்பு செயலாளர் விசுவநாதன் உடனிருந்தார். அருந்ததியர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வடிவேல் ராமன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT