தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 304 குறைந்தது!

17th Sep 2020 11:40 AM

ADVERTISEMENT

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 304 குறைந்து, ரூ. 39,272-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.38 குறைந்து, ரூ.4,909-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல, வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.20 பைசா குறைந்து ரூ. 69.80-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 69,800 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. 

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகுக்கின்றன.

ADVERTISEMENT

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,909

1 பவுன் தங்கம்...............................39,272

1 கிராம் வெள்ளி.............................69.80

1 கிலோ வெள்ளி.............................69,800

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,947

1 பவுன் தங்கம்...............................39,576

1 கிராம் வெள்ளி.............................71.00

1 கிலோ வெள்ளி.............................71,000

Tags : gold rate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT