தமிழ்நாடு

சென்னைத் துறைமுகத்தில் சரக்கு கையாளும் காலம் 7 நாள்கள் வரை நீட்டிப்பு

17th Sep 2020 03:31 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னைத் துறைமுகத்தில் சரக்கு கையாளும் காலம் 5 நாள்களில் இருந்து 7 நாள்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  சென்னைத் துறைமுகத்தில் 14.09.2020 அன்று ஏற்றுமதி கண்டெய்னர்களின் போக்குவரத்து சம்பந்தமான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், கண்டெய்னர் கையாள்வது எல்லா நாள்களிலும் சீராக அமையாமல், சரக்குப் போக்குவரத்து ஓரிரு நாள்களில் மிகுந்தும் சில நாட்களில் குறைந்தும் காணப்படுவது அறியப்பட்டது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக டி.பி.வேர்ல்ட் மற்றும் சிங்கப்பூர் பி.எஸ்.ஏ. நிறுவன முனையங்களில் சரக்கு கையாளும் நாள்களை தற்போதைய 5 நாள்கள் என்ற நிலையிலிருந்து 7 நாட்கள் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த நடைமுறை சோதனை முறையில் 16.09.2020 முதல் 15.10.2020 வரை மேற்கண்ட இரு முனையங்களிலும் மேற்கொள்ளப்படும். இதனால், ஏற்றுமதியாளர்கள் கண்டெய்னர்களை முன்கூட்டியே இறக்கி வைக்கவும் அதன் மூலம் கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்கவும் முடியும்.

மேலும், நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு துறைமுகம், சுங்கத்துறை மற்றும் சரக்கு முனையங்கள் போன்றே, துறை சார்ந்த மற்ற கப்பல் ஆப்பரேட்டர்கள், கஸ்டம்ஸ் தரகர்கள் மற்றும் ஏற்றுமதி துறை சார்ந்தவர்களையும் 24 மணி நேர முழு வேலை நேரத்தைப் பின்பற்ற, துறைமுக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT