தமிழ்நாடு

சென்னையில் 47 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள்: 25 லட்சம் பேர் பங்கேற்பு

17th Sep 2020 01:00 PM

ADVERTISEMENT

 

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை 47,876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் இதுநாள் வரை 47,876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 25,01,908 பேர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் கரோனா அறிகுறியுடன் இருந்த 1,41,106 பேரிடம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

கரோனா அறிகுறி மற்றும் காய்ச்சல் இருப்பவர்களைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னையில் காய்ச்சல் முகாம்களை தமிழக சுகாதாரத் துறை தீவிரமாக நடத்தி வருகிறது.

Tags : chennai update coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT