தமிழ்நாடு

ஓமலூர் அருகே பேரிடரில் தற்காத்துக்கொள்வது குறித்து ஒத்திகை

16th Sep 2020 02:45 PM

ADVERTISEMENT

 

ஓமலூர் அருகே மழை காலம் மற்றும் பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்ற ஒத்திகை நிகழ்ச்சி ஓமலூர் தீயணைப்புத்துறையினர் சார்பில் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாய்கன்பட்டி ஏரியில் மழை காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி? என்ற ஒத்திகை நிகழ்ச்சி ஓமலூர் தீயணைப்புத்துறையினர் சார்பில் நடைபெற்றது.

இதில் தண்ணீரில் மூழ்கிய பொதுமக்கள் தத்தளிக்கும் போது அங்கு உள்ள உபகரணங்களை வைத்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த தத்ரூபமாக செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இது பொதுமக்கள் கூறும் போது ஓமலூர் தீயணைப்பு துறையினர் வடகிழக்கு பருவமழை காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்ற ஒத்திகை நிகழ்ச்சி எங்களுக்கு புரியும் வகையில் செய்முறை விளக்கம் அளித்தனர். மேலும் இந்த செய்முறை விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் கூறினர்.

இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர் ரமேஷ்பாபு, தர்மலிங்கம், ரமேஷ்குமார், சிவா, வெங்கடேஷ், பாலமுருகன், கண்ணன், முருகேசன், பிரதீப் கண்ணன், விஸ்வநாதன், செந்தில்நாதன் உள்ளிட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT