தமிழ்நாடு

புதுச்சேரியில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் கைது

16th Sep 2020 11:54 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். 

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில், தற்காலிக(வவுச்சர்) ஊழியர்களாக பணிபுரிந்து வரும் 1,311 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, வவுச்சர் ஊழியர்கள் 50 பேர், புதன்கிழமை காலை புதுவை முதல்வர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை ஒதியன்சாலை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Tags : புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT