தமிழ்நாடு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஹைஜீனியம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில்

16th Sep 2020 04:18 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கொடைக்கானலுக்கு இ-பாஸ் மூலம் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 

இந்நிலையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகியவற்றையும், வெள்ளிநீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி, தலையாறு அருவி ஆகியவற்றை பார்த்துச் செல்கின்றனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், மேலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பிரையண்ட் பூங்காவில் ஹைஜீனியம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றைச் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக பார்த்து ரசித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT