தமிழ்நாடு

மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி

16th Sep 2020 11:25 AM

ADVERTISEMENT


சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், குரோம்பேட்டை பயிற்சி மையத்தில் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. பொது மக்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியானது, கடந்த 1995 ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் தொடங்கப்பட்டு, சிறந்த முறையில் இயங்கி வருகிறது. தற்பொழுது, கடந்த மார்ச் 2020 முதல் முறையான இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சியும் அளிக்கப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வாயிலாக ஓட்டுநர் உரிமமும் பெற்றுத் தரப்படுகிறது.

தகுதியும், அனுபவமும் மிக்க ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்களால், இப்பயிற்சியானது அளிக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு, பிரத்யோகமாக பெண் பயிற்சி ஆசிரியர்களாலேயே வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், ஆரம்ப நிலையில் மைதானப் பயிற்சி, பாலங்களில் ஏறி, இறங்குதல், பின்னோக்கி செல்லுதல், எட்டு வடிவ வளைவில் ஓட்டுதல் உள்ளிட்ட அனைத்து வகையான பயிற்சிகளும், பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மைதானத்திலேயே பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின்னர் அடுத்த கட்டமாக பொது சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கும் தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலம், இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு ஒரு மாத காலம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு 3 மாத காலம் ஆகும். 

அரசு சார்ந்த இப்போக்குவரத்துப் பயிற்சி மையத்தில் ஓட்டுநர் பயிற்சி பெறுவதன் மூலம் பாதுகாப்புடனும், தன்னம்பிக்கையுடனும் வாகனம் ஓட்டும் திறனைப் பெற்றிட இயலும். குறைவான கட்டணத்தில், நிறைவாக பயிற்சி அளிப்பதினால், பொது மக்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் முதல்வர், மாநகர் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி, காந்தி நகர், குரோம்பேட்டை, தொலைப்பேசி எண்.044-29535177 / கைப்பேசி எண். 9445030597 என்ற முகவரியில் அணுகவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : driving
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT