தமிழ்நாடு

பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

16th Sep 2020 12:45 PM

ADVERTISEMENT


சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து அரசு விவாதிக்க மறுப்பதாகக் கூறி சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து விவாதித்து, பேரவையில் கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் பாதகமான அம்சங்கள் பற்றி விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற நாளை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்தது.

ஆனால், தேசியக் கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார். முதல்வரின் பதிலை ஏற்க மறுத்த திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்ப செய்தனர்.
 

ADVERTISEMENT

Tags : stalin dmk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT