தமிழ்நாடு

தமிழகத்தில் கோவை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

16th Sep 2020 04:09 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 

ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சியாக நீடிக்கின்றது. 

ADVERTISEMENT

இதன் காரணமாக கோயம்புத்தூர, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் வெபய்யக்கூடும் .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைபெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

பந்தலூர் (நீலகிரி) 5 செ.மீ மழையும், கும்மிடிபூண்டி, ஹாரிசன் எஸ்டேட் தலா 4 செ.மீ மழையும், சங்கரிதுர்க், அவிநாசி தலா 3 செ.மீ மழையும், காவேரிப்பாக்கம், சிட்டம்பட்டி (மதுரை), சோலையார் தலா 2 செ.மீ மழையும் பெய்துள்ளது. 
 

Tags : Rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT