தமிழ்நாடு

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று

16th Sep 2020 10:26 AM

ADVERTISEMENT

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக, பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், 

ADVERTISEMENT

எனது கரோனா பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். நான் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் எனப் பதிவிட்டுள்ளார். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT