தமிழ்நாடு

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

16th Sep 2020 02:53 PM

ADVERTISEMENT

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 

கரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்று நடைபெற்றது. 

இதில், முக்கிய மசோதாக்களின் வரிசையில், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலம் நீடிக்கும் மசோதாவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா மூலமாக, தனி அலுவலர்களின் பதவிக்காலம் 2020 டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பு, கிசான் முறைகேடு உள்ளிட்டவை குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. 

Tags : TN Assembly
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT