தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே தொழிலாளி இறந்த துக்கத்தில் மனைவி, மகள் தற்கொலை

15th Sep 2020 03:13 PM

ADVERTISEMENT

 

நாகர்கோவில் அருகே தொழிலாளி இறந்த துக்கத்தில் மனைவி, மகள்கள் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒருவர் உயிருடன் மீட்பு நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம் இளையநயினார் குளத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கிய இருப்பதாக சுசீந்திரம் காவல்துறையினருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் 3 பேரையும் நீரில் இருந்து மீட்டனர். இதில் ஒருவர் உயிருடனும் மற்ற 2 பேரும் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டனர். உயிருடன் மீட்கப்பட்டவரிடம் காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. 

ADVERTISEMENT

நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு சாலை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (80) கூலித்தொழிலாளியான இவருக்கு பங்கஜம் (70) என்ற மனைவியும், மாலா (48) சச்சு (40) என்ற மகள்களும் இருந்தனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் வடிவேல் முருகன் தவித்து வந்தார். 

இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்ட வடிவேல் முருகன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். இதனால் மனைவி மற்றும் அவரது மகள்கள் வாழ வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதன்படி அவர்கள் சுசீந்திரம் இளையநயினார் குளத்தில் கைகளை ஒருவருக்கு ஒருவர் பாவாடை நாடாவால் கட்டிக் கொண்டு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர். 

பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததால் காவல்துறை வந்து இவர்களை மீட்டதில் சச்சு மட்டும் பிழைத்துக் கொண்டார். மற்ற 2 பேரும் உயிரிழந்தனர். சச்சு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த முதியவரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த மனைவி மற்றும் அவரது மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT